இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. G. சந்தீஷ், ஐ.பி.எஸ்., அவர்கள் நேரில் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து புகார் மனுக்களை பெற்றுக்கொண்டார். பெறப்பட்ட புகார் மனுக்களை உடனுக்குடன் பரிசீலித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும் என காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவிட்டார். மேலும், பொதுமக்களின் குறைகளை காலதாமதமின்றி நியாயமாக தீர்ப்பதுடன், காவல்துறை மீது பொதுமக்கள் நம்பிக்கை கொள்ளும் வகையில் பணியாற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த குறைதீர்ப்பு முகாமில் காவல் துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
















