திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் அவர்களின் அதிரடி ரவுடிகள் வேட்டை நடவடிக்கையால் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காவல் நிலைய போலீசார் மற்றும் ரவுடி ஒழிப்பு பிரிவு படையினரும், உளவு பிரிவு போலீசாரும் சுறுசுறுப்பாக செயல்பட்டு ரவுடிகளை ரகசியமாகவும், தீவிரமாகவும் கண்காணித்து வருகிறார்கள். மேலும் குற்ற செயல்களில் ஈடுபடும் ரவுடிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கும் வகையில் போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். ரவுடிகள் அனைவரும் போலீசாரின் கண்காணிப்பில் இருந்து வருவதால் ரவுடிகள் திண்டுக்கல் மாவட்டத்தை விட்டு செல்லும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் இந்த ரவுடிகளின் வேட்டை தொடரும் என்று காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா