கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் உட்கோட்டம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கர்காணிப்பாளர் திரு. P. தங்கதுரை TPS அவர்களின் உத்தரவின் பேரில் ஓசூர் உட்கோட்ட காவல்துறை கர்காணிப்பாளர் திரு A.பாபு பிரசாத் TPS அவர்களின் வழிகாட்டுதலின் படி மத்திகிரி காவல் வட்ட ஆய்வாளர் திரு. P. பிரகாஷ் அவர்களின் மேற்பார்வையில் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓசூர் To பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் வலது புறமாக உள்ள சிப்காட் காவல் நிலைய எல்லையான ஜீஜீவாடி முதல் அண்ணாமலை நகர் வரை சுமார் 66 இடங்களில் 171 சிசிடிவி கேமராக்கார் சிப்காட் தொழில் பேட்டையில் உள்ள சில நிறுவனங்களின் உதவியுடன் சுமார் 20 லட்ச ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே ஓசூர் To பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் இடது புறமாக உள்ள சிப்காட் காவல் நிலைய எல்லையான ஜீஜீவாடி முதல் தர்கா வரை சுமார் 25 இடங்களில் 85 சிசிடிவி கேமராக்கள் சிப்காட் தொழில் பேட்டையில் உள்ள சில நிறுவனங்களின் உதவியுடன் சுமார் 10 லட்ச ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ளது.
இந்த சிசிடிவி கேமராக்களின் தொகுப்புகள் அனைத்தும் சிப்காட் காவல் நிலையத்தில் காவலர்களால் 24/7 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனால் அதிகரித்து வரும் குற்றங்களை பெரும்பாலும் தடுக்க முடியாது என்றாலும் அவற்றை கட்டுப்படுத்த சிசிடிவி கேமராக்கள் பெரிதும் உதவுகின்றன. எனவே இது போன்ற சிசிடிவி கேமராக்களை உங்கள் வீட்டையும் அலுவலகத்தையும் முற்றிலும் பாதுகாப்பானதாக கண்காணிப்பில் வைத்திருக்க மிகவும் உதவியாக இருக்கும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுரையின் பேரில் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளை பாதுகாக்கப்பட்ட பகுதியாக மாற்ற வேண்டும் என்று நினைத்து தாங்கள் உறங்கும் போதும் 24/7 மணி நேரமும் பொதுமக்களை பாதுகாக்க மூன்றாவது கண்ணாக சிசிடிவி கேமராக்கள் கொண்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் விடுபட்ட பகுதிகளில் தொடர்ந்து சிசிடிவி கேமராக்களை பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சமீப காலங்களில் நடந்த குற்ற வழக்குகளை பொருத்தமட்டில் இந்த சிசிடிவி கேமராக்கள் உதவியுடன் நான்கு சக்கர வாகனம் ஒன்று மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் 15 என வாகன திருட்டுகள் நடந்த குற்ற வழக்குகளை உடனுக்குடன் இந்த சிசிடிவி பதிவுகளைக் கொண்டு குற்றவாளிகளை கைது செய்து வழக்குச் சொத்தினை வைத்து குற்றவாளிகளை நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இரவு நேரங்களில் வீடு புகுந்து கொள்ளையடித்த இரண்டு கொள்ளையர்களை சமீபத்தில் கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 10 சவரன் நகைகள் மீட்கப்பட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இன்றைய மக்கள் தொகை வளர்ச்சியில் தொடர் குற்றவாளிகளை கண்காணிக்கவும் குற்றம் நடவாமல் தடுக்கவும் இந்த சிசிடிவியின் பயன்பாடுகள் ஒரு மூன்றாவது காவலர் போல் உதவியாக இருந்து வருகிறது. எனவே தொழில் துறையினருக்கும் பொது மக்களுக்கும் தங்களது உடமைகளை காக்க சிசிடிவி கேமராக்களை பொருத்துமாறு சிப்காட் காவல் நிலையம் சார்பாக அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்