கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் உடல்நலக் குறைவால் கடந்த ஆண்டு உயிரிழந்த ஓசூர் பாகலூர் காவல் நிலைய தலைமை காவலர் ராஜேந்திரன் குடும்பதினருக்கு 2011-ம் ஆண்டு பணியில் சேர்ந்த காவலர்கள், ‘காக்கி உதவும் கரங்கள்’ குழு மூலம் ரூ.25.49 லட்சம் நிதி திரட்டி அவரது மகன்களான முகுந்த் அகிலேஷ் (5) பெயரில் ரூ.11,47,410 மற்றும் சம்ருத் (3) பெயரில் 11,47,253 காப்பீடு செய்து ரூ,2,54,831க்கு காசோலை எடுத்தனர். கிருஷ்ணகிரி மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் ராஜேந்திரனின் குடும்பத்தினரிடம் காப்பீடு பத்திரங்கள் மற்றும் காசோலையை எஸ்.பி. தங்கதுரை வழங்கினார்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்















