திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பதாக எஸ்.பி.பிரதீப் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ASP.சிபின் தலைமையில் நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் மோகன் எ.ஸ்பி.தனிப்படை சார்பு ஆய்வாளர் ரவிசங்கர் காவலர்கள் செந்தில், சந்தியாகு, மருது, ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கொண்ட தனிப்படையினர் திண்டுக்கல் வத்தலகுண்டு ரோடு பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது வத்தலகுண்டு ரோடு S.P.T.மஹால் அருகே காரில் குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைத்திருந்த அதே பகுதியை சேர்ந்த காஜாமைதீன் மகன் அபூபக்கர்சித்திக்(46). என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 500 கிலோ குட்கா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா