திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி பேரவைத் தொகுதி தேர்தல் பாதுகாப்புக்காக எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் ஏர்வாடி அருகேயுள்ள சிறுமளஞ்சி முகாமிற்கு (08.03.26) அன்று வந்தனர். தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ள நிலையில், நாங்குநேரி தொகுதி தேர்தல் பாதுகாப்புக்காக சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மாநிலங்களில் இருந்து 133ஆவது பட்டாலியன் எல்லை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த உதவி கமாண்டர் பசந்த் யாதவ் தலைமையிலான குழுவினர் வந்துள்ளனர். இக்குழுவில் ஆய்வாளர், உதவி ஆய்வாளர், தலைமைக் காவலர், காவலர் என மொத்தம் 85 பேர் அடங்குவர். முன்னதாக, இக்குழுவினரை மேள தாளங்களுடன் ஏர்வாடி காவல் ஆய்வாளர், செல்வி தலைமையிலான காவல்துறையினர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்















