திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி பெரும்பத்து கிராமத்தில் சட்டப்பேரவை தேர்தலையொட்டி எல்லை பாதுகாப்பு படையினரின் கொடி அணிவகுப்பு ஊர்வலம் (10.03.26) அன்று மாலை நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மரு. பிரசன்னகுமார், இ.கா.ப. தலைமையில் எல்லை பாதுகாப்பு படையைச் சேர்ந்த உதவி கமாண்டர் பசந்த் யாதவ் உள்ளிட்ட 85 பேர் அடங்கிய வீரர்களின் கொடி அணிவகுப்பு ஊர்வலம், பெரும்பத்து புறக்காவல் நிலையம் முன் தொடங்கி பெரும்பத்து, மஞ்சங்குளம் பகுதிகள் வழியாக வந்தது. நான்குனேரி துணை காவல் கண்காணிப்பாளர், தர்சிகா நடராஜன், வட்டாட்சியர் பாலகிருஷ்ணன், மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















