தேனி : கேரளாவில் தொடர்ந்து கொரானா பரவல் அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேனி மாவட்டம் தமிழக கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள குமுளி மற்றும் கம்பம்மெட்டு வழியாக கேரளா செல்வதற்கு கேரள போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் தீவிர பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் வாகனங்களிலும் இரு சக்கர வாகனங்களிலும் இடுக்கி மாவட்டத்திலுள்ள ஏலத் தோட்டங்களுக்கு செல்வது வழக்கம்.
இந்நிலையில் தோட்ட வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள் முற்றிலுமாக வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இ- பாஸ் மற்றும் இரண்டு முறை கொரானா தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் வெப்ப பரிசோதனை ஆகிய பரிசோதனைகள் செய்த பின்பு எல்லையில் அனுமதிக்கின்றனர்.
மேலும் கேரளத்திலிருந்து தமிழகத்துக்கு வருபவர்கள் இ- பாஸ் மற்றும் வெப்ப பரிசோதனை செய்த பின்பு தமிழகத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
எல்லையில் கேரள அரசு மிகவும் கெடுபிடி காட்டுவதால் இருமாநில மக்களும் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர் .