தர்மபுரி : ஏரியூர் அருகே உள்ள, பட்டக்காரன் கொட்டாயில் அய்யனாரப்பன், கருப்பசாமி, சந்தப்பேட்டையில் முத்துமாரியம்மன் ஆகிய கோவில் உள்ளன. நேற்று காலை கிராமமக்கள் கோவில்களுக்கு சென்றனர். அப்போது 3 கோவில்களின் பூட்டு உடைக்கப்பட்டு பூஜை சாமான்கள், உண்டியல் பணம், அம்மன் கழுத்தில் இருந்த தாலி ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கிராமமக்கள் ஏரியூர், காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் காவலர், வழக்குப்பதிவு செய்து கோவில்களில் கைவரிசை காட்டிய, மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரியில் இருந்து நமது நிருபர்
க.மோகன்தாஸ்.