திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை ஓரம் இருசக்கர வாகனம் ஒன்று எரிந்த நிலையில் கிடந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில் ரெட்டியபட்டி பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவர் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது இரவு திடீரென பைக் தீப்பிடித்ததாகவும், பைக்கை சாலை ஓரத்தில் நிறுத்தி தண்ணீர் ஊற்றி அணைத்துவிட்டு அப்படியே வீட்டிற்கு சென்று விட்டதாகவும் தெரியவந்தது. இருப்பினும் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்காததால் போலீசார் அவரை எச்சரித்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா