காஞ்சிபுரம்: வெம்பாக்கம் தாலுகா சுருட்டல் கிராமத்தில் சாராய வியாபாரி மணி என்பவரின் வீட்டில் எரிசாராயம் பதுக்கி வைத்திருப்பதாக தூசி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து செய்யாறு துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் தலைமையிலான, தூசி காவல் ஆய்வாளர் அண்ணாதுரை, காவல் உதவி ஆய்வாளர் சிலம்பரசன்,கலால் காவல் உதவி ஆய்வாளர் மகாராணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சோதனை நடத்தினர்.
அப்போதுசாராய வியாபாரி மணி வீட்டின் பின்பகுதியில் உள்ள விளைநிலங்களில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 56 கேன்களில் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான எரிசாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது சம்பந்தமாக மணி மகன் மோகன்ராஜ், பாலமுருகன், குணசீலன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மணியே போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.