தேனி: போடி அருகே பெருமாள்கவுண்டன்பட்டியில் அ.தி.மு.க., எம்.பி., ரவீந்திரநாத் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவத்தில் 15க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கார் ஊருக்குள் நுழைந்தும் அடையாளம் தெரியாத சிலர் எம்.பி.,யின் கார், உடன் ஆதரவாளர்கள் வந்த அவரின் மற்றொரு காரின் மீதும் கற்களை வீசினர். இதில் கார்களின் கண்ணாடி சேதமடைந்தது. மர்ம நபர்கள் தப்பியோடிவிட்டனர்.
பெருமாள் கவுண்டன்பட்டியை சேர்ந்த பெரிய பாண்டி, ராஜாங்கம், ஜெயேந்திரன், மணிகண்டன், விஜயன், மாயி, கார்த்திக் உட்பட 15 க்கும் மேற்பட்டோர் சேர்ந்து கம்பு, கட்டையால் எம்.பி.,யை தாக்க முயன்றும், கொலை மிரட்டல் விடுத்தும்,
கற்கள் வீசி தாக்கியதில் கார்களின் கண்ணாடி உடைந்து விட்டதாக டிரைவர் பாண்டியன் புகார் செய்துள்ளார். அவர்கள் மீது போடி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.