திருநெல்வேலி: திருநெல்வேலி முன்னீர் பள்ளம் மேலசெவல் அருகே காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்தபோது அவ்வழியாக வடக்கு சங்கன்திரடைச் சேர்ந்த ஆவுடையப்பன் (32). ராமச்சந்திரன் (42). ஆகிய இருவரும் வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் உரிய அனுமதிச் சீட்டு இன்றி எம்.சாண்ட் ஏற்றி வந்தது தெரிய வந்தது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த முன்னீர் பள்ளம் காவல் உதவி ஆய்வாளர் , எட்வின் அருள்ராஜ் விசாரணை மேற்கொண்டு, ஆவுடையப்பன், ராமச்சந்திரன் ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து ஒரு யூனிட் எம்.சாண்ட் மணல் மற்றும் டிப்பர் லாரியையும் பறிமுதல் செய்தார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்