இந்திய தேர்தல் ஆணையமானது 2024-ம் ஆண்டு 18-வது மக்களவை தேர்தலுக்கான அட்டவணையினை வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 19-ம் தேதி அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவானது நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாகை மாவட்டத்தில் 100 % வாக்கு செலுத்துதலின் அவசியத்தை முன்னெடுத்தும், நேர்மையாக வாக்கு செலுத்துதலின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் என் வாக்கு வாடகைக்கு அல்ல என்ற தலைப்பின் கீழ் நாகை மாவட்ட ஆட்சியர் திரு. ஜானி டாம் வர்கிஸ் இ. கா. ப அவர்களும், நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஹர்ஷ் சிங் இ. கா.ப அவர்களும் கையெழுத்து இயக்கம் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளி ஆணையத்திலிருந்தும், மகளிர் திட்டம் அமைப்பில் இருந்தும் 100 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் விழிப்புணர்வு வாசகங்கள் பொருந்திய பதாகைகளுடன் பேரணியில் ஈடுபட்டனர். நாகை புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கப்பட்ட இந்த விழிப்புணர்வு பேரணியானது RDO அலுவலகத்திலும் அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முடிக்கப்பட்டது.