அரியலூர் : அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த முனியன் என்பவரது மகன் கலியன் என்கிற கருணாநிதி (54) என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமியை பாலியல் வன்தாக்குதல் செய்துள்ளார். இது குறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதனை அடுத்து விசாரணை அடிப்படையில் கலியன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இவ்வழக்கு (27.12.2022) அரியலூர் மகிளா விரைவு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது இதில் காவல் ஆய்வாளர் திருமதி.சுமதி, அவர்கள் கலியனுக்கு எதிரான அனைத்து சாட்சிகள் மற்றும் ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்கள். இவை அனைத்தையும் கேட்டறிந்த அரியலூர் மகிளா விரைவு நீதிமன்ற நீதிபதி திரு.ஆனந்தன் அவர்கள் குற்றவாளி கலியன் என்கிற கலியனையை எஞ்சிய வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை அனுபவிக்கும் படியும் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்கள்.