திண்டுக்கல்: திண்டுக்கல் இரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் தூய மணி வெள்ளைச்சாமி தலைமையில்,சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன், மற்றும் போலீசார் ராஜா, சந்திரசேகர்,சக்தி சண்முகம்,ராகவன், மதன்ராஜ் ஆகியோர் நேற்று புருவிய அதிவிரைவு எக்ஸ்பிரஸ் இரயிலில் சோதனை நடத்தினர். அப்போது பொதுப்பெட்டியில் கேட்பாராற்று கிடந்த 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுசீந்திரன்,ஏட்டு கோகுலக்கண்ணன் ஆகியோரிடம் ஒப்படைத்தனர். விற்பனைக்காக கஞ்சா கடத்தி வந்த மதுரையைச் சேர்ந்த ராமன்,கணேசன் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.மேலும் அவர்களிடமிருந்து 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா