நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்ட ஊர்க்காவல் படையில் பணியாற்ற 59 பேர் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் 6 பெண்கள் உள்பட 53 ஆண்களுக்கு சிறப்பு பயிற்சி நாகை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. 45 நாட்கள் நடைபெற்ற இப்ப பயிற்சியானது, அடிப்படை கவாத்து, பேரிடர் மீட்புப் பணிகள் பயிற்சி, நீச்சல் உள்ளிட்ட, ஆயுதம் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இந்த பயிற்சியின் நிறைவு விழா இன்று (11.03.2024) நாகை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. விழாவுக்கு தலைமை தாங்கிய நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ஹார்ஷ் சிங் இ. கா. ப அவர்கள் , ஊர்க்காவல் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்கள். தொடர்ந்து பயிற்சியில் சிறப்பாக செயல்பட்ட ஊர்க்காவல் படை வீரர்களுக்கு 3 பேருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்கள். ஜனவரி 26 கவாத்து அணிவகுப்பின் கலந்து கொண்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்கள்.
அதைத்தொடர்ந்து மாவட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில் பொதுமக்களாகிய நீங்கள் இன்று ஊர்காவல் படைகள் தங்களை இணைத்துக் கொண்டதற்கு நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அதற்காக உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஊர்க்காவல் படையில் சிறப்பாக பயிற்சி முடித்த நீங்கள், போலீஸ் சீருடை அணிவது பெருமையான விஷயம். அதற்குரிய மரியாதையுடன் நீங்கள் நடந்து கொள்ள வேண்டும். நம்மால் நாம் வேலை செய்யும் துறைக்கு எந்த ஒரு அவப்பெயரும் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பொதுமக்களிடம் மிகவும் பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும். யார் மனதையும் புண்படும்படி பேசக்கூடாது. பேரிடர் காலத்தில் உங்களுடைய பணி சிறப்பானதாக அமைய வேண்டும். பொதுமக்களின் நன்மதிப்பை பெறும் வகையில் நீங்கள் பணியாற்ற வேண்டும், மேலும் தான் முடித்த ஐ,பி,எஸ் பயிற்சி பற்றி சுவாரசியமான தகவல்களை ஊர்க்காவல் படை வீரர்கள் முன்னிலையில் நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பகிர்ந்து கொண்டார்கள்.