தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் காலியாக இருந்த 13 பேருக்கு மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு நடைபெற்றது. இதில் 9 ஆண்கள், 4 பெண்கள் என மொத்தம் 13 பேர் ஊர்க்காவல் படை வீரர்களாக தேர்வு செய்யப்பட்டனர். மேற்படி தேர்வு செய்யப்பட்ட 13 ஊர்க்காவல் படை வீரர்களுக்கு இன்று (08.12.2025) தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து பணி நியமன ஆணை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். மேற்படி 13 ஊர்க்காவல் படை வீரர்களுக்கும் நாளை (09.12.2025) முதல் 45 நாட்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்நிகழ்வின் போது தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் திரு. ஆறுமுகம் அவர்கள் உடனிருந்தார்.















