அரியலூர்: கடந்த மாதம் ஊர்க்காவல் படையில் 28 காலி பணி இடங்களுக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டது. இதனை அடுத்து 06.10.2022 இன்று அரியலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் சேர்ப்பு முகாம் நடைபெற்றது.
இதனை அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.K.பெரோஸ் கான் அப்துல்லா அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அரியலூர் மாவட்ட ஆயுதப்படை துணைக் கண்காணிப்பாளர் திரு.மணவாளன் அவர்கள் மற்றும் ஊர்க்காவல் படை ஏரியா கமாண்டர் திரு.ஜீவானந்தம் அவர்கள் மேற்பார்வையில் முகாம் நடைபெற்றது.
முகாமில் கலந்து கொண்ட 183 ஆண்கள் மற்றும் 25 பெண்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்கூறு அளத்தல் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஆண்களுக்கு உயரம் மற்றும் மார்பு அளவிடும், பெண்களுக்கு உயரம் அளவிடும் செய்யப்பட்டது. அரியலூர் மாவட்ட ஆயுதப்படை உதவி ஆய்வாளர்கள் மற்றும் ஊர்க்காவல் படை அதிகாரிகள் உடல் தேர்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.