தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் பணிபுரிந்து வந்த சதீஷ்குமார் என்பவர் கடந்த (03.12.2024) அன்று உயிரிழந்தார். மேற்படி உயிரிழந்த ஊர்க்காவல் படை வீரரின் மனைவிக்கு ஊர்க்காவல் படை சேம நலநிதியிலிருந்து ரூபாய் ஒரு லட்சத்திற்கான காசோலையை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் இன்று வழங்கினார்.
















