திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம்,சேரன்மகாதேவி, கோவிந்தபேரியிலுள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரி மற்றும் மாவட்ட ஊர்க்காவல் படையினர் கலந்து கொண்ட மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது. இம்முகாமை திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர், சுப்பிரமணியன் தலைமையேற்று துவக்கி வைத்தார். சேரன்மகாதேவி அரசு மருத்துவ தலைமை அதிகாரி, டாக்டர் சாந்தி தலைமையிலான மருத்துவ குழுவினர் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பான முறையில் நடைபெற்ற இரத்ததான முகாமில், ஊர்க்காவல் படையினர் மற்றும் மாணவர்கள் என மொத்தம் 50 நபர்கள் இரத்த தானம் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊர்க்காவல் படை ஏரியா கமாண்டர் சுதன், ஊர்க்காவல் படை துணை ஏரியா கமாண்டர் டாக்டர் வினோத் வின்சென்ட் ராஜேஷ், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரி முதல்வர், மற்றும் சமூக ஆர்வலர் மற்றும் மாவட்ட ஆப்தமித்ரா பேரிடர் முதல் நிலை தன்னார்வலர், நெய்னா முகமது மருத்துவ குழுவினர் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்