திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் முனைவர்.நெ. மணிவண்ணன், இ.கா.ப., உத்தரவின் படி, திருநெல்வேலி மாநகர காவல் துறையில் ஆண்கள் (60), பெண்கள் (05) என மொத்தம் 65 நபர்கள் ஊர் காவல் படையினருக்கு தேர்வு செய்யப்பட்டு மாநகர ஆயுதப்படை மைதானத்தில் கடந்த (21.01.2026) முதல் 45 நாட்கள் அடிப்படை பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது. திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர், S.விஜயகுமார் (தலைமையிடம்), இப்பயிற்சியை (23.01.2026) அன்று பார்வையிட்டு பயிற்சியில் இருப்பவர்களுக்கு அறிவுரைகளை வழங்கி அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















