திருநெல்வேலி: தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி ஊர்க்காவல் படையினர் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு காவலர் பல்பொருள் அங்காடி பயன்பாட்டிற்கான அடையாள அட்டையை வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் பணிபுரியும் ஊர்க்காவல் படையினர் பயன்பெறும் வகையில் காவலர் பல்பொருள் அங்காடி அடையாள அட்டைகளை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன்.இ.கா.ப., மாவட்ட ஊர்க்காவல் படையினரை மாவட்ட காவல் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் சுப்பிரமணியன், மற்றும் ஊர்க்காவல் படையினர் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்