மதுரை: மதுரை மாவட்ட ஊர்காவல் படைக்கு கீழ்க்காணும் தினத்தில் காலை 09.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை ஊர்க்காவலர்கள் தேர்வு நடைபெற உள்ளது. கல்வித்தகுதி 10-ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். (18). வயதிற்கு மேற்பட்ட (45). வயதிற்குட்பட்ட சேவை மனப்பான்மையுடன் கூடிய ஆண்கள் தேர்வில் கலந்து கொள்ளலாம். தேர்வுக்கு வருபவர்கள் தங்கள் கல்வி, வயது நிரூபண அசல் மற்றும் நகல் சான்றிதழுடன் வரவேண்டும். விண்ணப்பங்களை மதுரை மாவட்ட ஆயுதப்படையில் அமைந்துள்ள ஊர்க்காவல் படை அலுவலகத்தில் (24.09.2025) முதல் (30.09.2025) வரை 07 நாட்கள் இலவசமாக நேரில் பெற்றுக் கொள்ளலாம் தெரிவிக்கப்படுகிறது. தேர்வு நடைபெறும் இடம் மதுரை மாவட்ட ஆயுதப்படை மைதானம், தேர்வு நாள் (03.10.2025) அன்று நடைபெறுகிறது.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்