தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலக மைதானத்தில் வைத்து மீனவ ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 20 (ஆண்கள்) மீனவ இளைஞர் ஊர்காவல் படையினரின் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு மாவட்ட காவல் அலுவலக மைதானத்தில் வைத்து (19.08.2025) தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த (18). வயதிற்கு மேற்பட்ட (50). வயதிற்க்குட்பட்ட நீச்சல் தெரிந்த ஆண்கள் கலந்து கொண்டனர். தேர்வில் கலந்து கொண்டவர்களுக்கு உயரம் மற்றும் மார்பு அளத்தல், சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு ஆகியவை நடைபெற்றது. தேர்வில் கலந்து கொண்டவர்களில் 20 நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பின்னர் அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படும். இந்நிகழ்வின் போது தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. ஆறுமுகம், தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் டாக்டர் C. மதன் இ.கா.ப, தூத்துக்குடி ஊர்க்காவல்படை வட்டாரத் தளபதி திரு. பாலமுருகன் ஆகியோர் உடனிருந்தனர்.