தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் ஊர்க்காவல் படை பிரிவு சார்பாக நேற்று (17-7-2022 ), மரக்கன்று நடும் விழா மற்றும் இரத்ததான முகாம், நடைபெற்றது. இவ்விழாவில், கும்பகோணம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு.அசோகன், அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள். தஞ்சாவூர் மாவட்ட ஊர்க்காவல் படை மண்டல தளபதி திரு.சுரேஷ், தலைமையில், கும்பகோணம் படை பிரிவு படைத்தளபதி திரு.ரவி, முன்னிலையில் உதவி ஆய்வாளர் திரு . ஆறுமுகம், வரவேற்புரை வழங்கினார்.
இதனை தொடர்ந்து சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் கும்பகோணம் காவல்துறை கட்டுப்பாட்டு அறை வளாகத்தில் நடப்பட்டது. அதன் பின்னர் 27 ஊர்க்காவல் படை வீரர்கள் இரத்ததானம் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் கும்பகோணம் மற்றும் புறப் பகுதியை சேர்ந்த அனைத்து ஊர் காவல் படை வீரர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். எழுத்தர் திரு .செந்தில்குமார், நன்றியுரை நல்கினார்.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளர்