திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஒன்றியம், எத்திலோடு ஊராட்சியில் உள்ள ஆவாரம்பட்டியை சேர்ந்த சிலர் அடிப்படை வசதிகள் செய்து தராததால் எத்திலோடு ஊராட்சி அலுவலகத்தை பூட்டு போட்டு பூட்டினர். இச்சம்பவம் குறித்து ஊராட்சி தலைவர். ராஜலட்சுமி விளாம்பட்டி காவல் நிலைய காவல்துறையினரிடம் புகார் அளித்தார். அதன் பேரில் ஊராட்சி அலுவலகத்துக்கு பூட்டு போட்டதாக ஆவாரம்பட்டியை சேர்ந்த பவுன், பாண்டி உள்பட 2 பேர் மீது ஆய்வாளர். சர்மிளா வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா