தேனி: தேனி மாவட்டத்தில் கடந்த 10-ந்தேதி முதல் 24 வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. காய்கறி, பலசரக்கு கடை மட்டும் காலை 10 மணிவரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதில் 10 மணி வரை மட்டும் காய்கறி, மளிகை கடைகள் திறக்க அனுமதி இருந்தாலும், பத்து மணியைக் கடந்து, தேனி மாவட்டத்தில், தேனி, கம்பம், போடி, உத்தமபாளையம், உள்ளிட்ட ஊர்களில் வாகனங்கள் சுற்றி வருவதாக புகார் எழுந்துள்ளது
. இதனால் நோய் தொற்று அதிகரிக்கும் ஆபத்து உள்ளது எனவே உடனடியாக இதனை நிறுத்தி நடமாட்டம் கட்டுப்படுத்த போலீசார் தீவிர நடவடிக்கை மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.