திண்டுக்கல் : திண்டுக்கல்லில் புதிய வகையான மோசடி கூகுள் பே மூலம் பணத்தை அனுப்பி வைத்து விட்டு அந்த பணத்தை திருப்பி அனுப்பி வையுங்கள் என்று கூறி நாம் அனுப்பி வைத்தால் நமது வங்கி கணக்கு மூலம் நமது பணத்தை திருடிக் கொள்ளும் புதுவகையான மோசடி தற்போது அரங்கேறியுள்ளது. ஆகவே பொதுமக்கள் அவ்வாறு தங்களுக்கு பணம் வந்தால் அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு நேரில் வந்து அங்கு பெற்று செல்லுமாறு கூறிவிட்டு அவரது தொலைபேசி எண்ணை பிளாக் செய்து விடவும் என்று சைபர் கிரைம் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தாங்கள் பணம் அனுப்பி தங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டால் உடனடியாக சைபர் கிரைம் உதவி எண் 1930 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.