திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் மார்ச் 21 உலக வனநாளை முன்னிட்டு
திண்டுக்கல் சமூக வனக்கோட்டம் , கோட்டவன அலுவலர். மகேந்திரன் அவரது உத்தரவின்படி திண்டுக்கல் பார்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மரம் நடுவிழா மற்றும் வனம் காப்போம் மரம் வளர்ப்போம் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இவ்விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர். சீனிவாசன் தலைமை வகித்தார். அழகர் கோயில் சமூக வளச்சரக அலுவலர். அன்பழகன் ஒட்டன்சத்திரம் சமூக வனச்சரக அலுவலர் சிவராம் வேடசந்தூர் சமூக வனச்சரக அலுவலர் . நவீன் குமார் நிலக்கோட்டை சமூக வனச்சரகர். அருண்குமார் பழனி சமூக வனச்சகர். மகேஷ் ஆத்தூர் சமூக வனச்சரகர் கார்வேந்தன் நத்தம் சமூக வனச்சரகர். சக்திவேல் செந்துறை சமூக வனச்சரகர். ஞான பாலமுருகன் ஆகியோர் தலைமை ஏற்றனர். வனவர்கள் சாமியப்பன் சங்கர் விவேகானந்தன் பாலகிருஷ்ணன் ஆகியோர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்தனர் . மேலும் கல்லூரி மாணவி செல்வி கீர்த்தி நன்றி உரையாற்றினார்
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா