மதுரை: தமிழின் இனிமையும் அதன் பெருமையும் உலகம் முழுவதும் புகழப்பட்டுள்ள நிலையில், “தமிழுக்கும் அமுதென்று பேர் – அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” எனப் பாவேந்தர் பாரதிதாசன் பாடியுள்ளார். இவ்வளவு பெருமைமிக்க தமிழ்மொழியின் சிறப்பை எடுத்துரைக்கும் வகையில், மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று (20.02.2026) உலக தாய்மொழி தினம் அனுசரிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ. லோகநாதன் இ.கா.ப. அவர்கள் தலைமையேற்று, காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்களுடன் இணைந்து தாய்மொழி பாதுகாப்பு உறுதிமொழியை எடுத்துக்கொண்டார். நிகழ்ச்சியில் மாநகர காவல் துணை ஆணையர்கள், சிறப்புக் காவல்படை தளவாய்கள் உள்ளிட்ட காவல் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு தாய்மொழியின் முக்கியத்துவம் குறித்து கருத்துகளை பகிர்ந்தனர்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.முகமது மூசா
















