விருதுநகர்: விருதுநகர், காரியாபட்டி அரசு மருத்துவ மனை மற்றும் அரிமா சங்கம் சார்பில் உலக சுகாதார தின விழா நடை பெற்றது. விழாவில், அரிமா சங்கத் தலைவர் அழகர் சாமி தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஜெயப்பிரகாஷ் . செயலாளர் விக்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் ராமசாமி வரவேற்றார். விழாவில், நோய் தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிப்போம் நோய் வராமல் காப்போம் என்ற உறுதி மொழி வாசிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், அரசு மருத்துவமனை டாக்டர்கள் முத்து விஜயன் சித்த மருத்துவ அலுவலர் மாமல்லன் ஆகியோர் நோய்கள் வராமல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது, உடல்நலம் காப்பது பற்றி பேசினார்கள். நிகழ்ச்சியில், செவிலியர் கண்காணிப்பாளர் வாசுகி, லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் செந்தில் முனிஸ்வரன் , பிரின்ஸ், ஜெயக்குமார். சிவக்குமார். பாஸ்கரன், பரக்கத் அலி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி