திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் வண்ணாரப்பேட்டை டாக்டர். அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் உலக கண் நீர் அழுத்த நோய் விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு மனிதச் சங்கிலி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர், V.வினோத் சாந்தாரம் (கிழக்கு) கலந்து கொண்டார். டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையில் மண்டல மருத்துவ இயக்குனர், இந்திய மருத்துவர் சங்கம், கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்