சென்னை: சென்னை மாதவரம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரவி (36) ரவுடி இவர் மீது வழிப்பறி அடிதடி கொலை முயற்சி உள்ளிட்ட 5 க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. மாதவரம் போலீஸ் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளியாகவும் இருந்து வருகிறார். கொளத்தூர் போலீஸ் துணை கமிஷனர் திரு.ராஜாராம், முன்னிலையில் ரவி ஆஜராகி, தான் திருந்தி வாழப்போவதாக பிரமாண உறுதிமொழி பத்திரம் எழுதிக்கொடுத்தார். கடந்த 3- ந்தேதி மாதவரத்தில் வழிப்பறியில் ஈடுபட்டதாக மாதவரம் போலீசார் ரவியை கைது செய்து பிரமாண பத்திர உறுதிமொழியை மீறி மீண்டும் குற்றச்செயலில் ஈடுபட்டதால் குற்றவாளி ரவியை 257 நாட்கள் சிறையில் அடைக்க கொளத்தூர் துணை கமிஷனர் உத்தரவிட்டார். இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.