தேனி : தேனி மாவட்டம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நபருக்கு உடனடியாக ‘O’ Positive இரத்தம் தேவைப்படுவதாக மாவட்ட காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததும், மருத்துவமனைக்கு விரைந்து சென்ற ஆயுதப்படை முதல்நிலைக் காவலர் திரு.சந்தானதுரை அவர்கள் தக்க மருத்துவப் பரிசோதனைக்கு பின் உரிய நேரத்தில் இரத்ததானம் வழங்கினார். இரத்ததானம் வழங்கியதையடுத்து பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்தினர் தேனி மாவட்ட காவல்துறைக்கு தங்களது நன்றிகளை தெரிவித்தனர்.
தேனியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.P.நல்ல தம்பி