தென்காசி: தென்காசி மாவட்டம் புளியங்குடி உட்கோட்ட காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதிகளில் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட உரிமை கோரப்படாத நிலையில் இருந்து வரும் 197 இருசக்கர வாகனங்கள், உட்பட மொத்தம் 202 மோட்டார் வாகனங்கள் பொது ஏலத்திற்கு வரும் 23.03.2026 ஆம் தேதி காலை 09.00 மணி முதல் மதியம் 03.00 மணி வரை சொக்கம்பட்டி காவல்நிலைய வளாகத்தில் வைத்து நடைபெற உள்ளது.
இதில் கலந்து கொண்டு வாகனங்களை ஏலம் எடுக்க விரும்பும் நபர்கள் மேற்படி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை (18.03.2026) முதல் (21.03.2026)- வரை காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணிவரை நேரில் பார்வையிடலாம், மேலும் தங்களின் பெயர், முகவரி அடங்கிய ஆதார் அட்டையுடன் ரூபாய் 3000/- முன்பணம் செலுத்தி பதிவு செய்து டோக்கன் பெற்றுக்கொள்ள வேண்டும். டோக்கன் பெற்றவர்கள் மட்டுமே ஏலத்தில் பங்கேற்க முடியும். வாகனத்தை ஏலம் எடுத்தவர்கள் ஏலம் எடுத்த நாளிலேயே அரசுக்கு ஏலத்தெகையுடன் GST(18%) தொகையினையும் சேர்ந்து ரொக்கமாக உடனடியாக செலுத்தி வாகனத்தை எடுத்துச்செல்லவேண்டும். மேலும் விபரங்களுக்கு 94884-88933, 9629919033, 9498140002 என்ற கைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்














