தூத்துக்குடி: சேரகுளம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. முனியாண்டி மற்றும் காவலர்கள் (18.01.2026) ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, சேரகுளம் பகுதியில் சுந்தரவேல் (32). என்பவர் உரிமம் இன்றி விற்பனைக்காக பட்டாசுகளை வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, சேரகுளம் சார்பு ஆய்வாளர் திரு. முனியாண்டி அவர்கள் வழக்குப்பதிவு செய்து, சுந்தரவேலை கைது செய்ததுடன், உரிமம் இன்றி விற்பனைக்காக வைத்திருந்த பட்டாசுகளையும் பறிமுதல் செய்தார். பொதுமக்கள் பாதுகாப்பு கருதி, உரிமம் இன்றி பட்டாசு விற்பனை செய்வோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் தெரிவித்தனர்.
















