திண்டுக்கல் : சென்னை பெருநகர காவல் துறையில் பணிபுரிந்து உயிர் நீத்த திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த காவலர் வீரபாண்டி அவர்களின் குடும்பத்தினருக்கு அவருடன் 2011-ம் ஆண்டு பணியில் சேர்ந்த காவலர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ரூ.16,26,455 நிதியை திரட்டினர். இதையடுத்து இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.பாஸ்கரன் முன்னிலையில் ரூ.16,26,455 நிதியை காப்பீட்டு திட்டம் மற்றும் பணமாகவும் உயிர் நீத்த வீரபாண்டியன் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா