கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் 20.11.2019 ,குமரி மாவட்ட ஆயுதப்படை காவலர் திரு.காட்வின் டோனி (PC 1794) அவர்கள் 23.10.2019 அன்று நடந்த சாலை விபத்தில் மரணமடைந்தார். இதனையடுத்து கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் அனைத்து அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை தானாக முன் வந்து 10,73000/- ரூபாயை வழங்கினர். அந்த ரூபாயை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.N.ஸ்ரீநாத் IPS அவர்கள் காவலர் காட்வின் டோனியின் குடும்பத்தினரிடம் வழங்கினார்.