திருநெல்வேலி: நீலகிரி மாவட்டம் குன்னூர் மலைப் பகுதியில் முப்படை தளபதி திரு.பிபின் ராவத், அவர்கள் உட்பட ராணுவ வீரர்கள் பயணம் செய்த ஹெலிகாப்டர் எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டு அதில் பயணம் செய்த முப்படை தளபதி பிபின் ராவத், அவர்கள் அவரது குடும்பத்தார், உட்பட ராணுவ வீரர்கள் 13 பேர் உயிரிழந்தனர்.
இவர்களின் புகைப்படத்திற்கு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன், இ.கா.ப, அவர்கள் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறுகையில் இந்தியாவின் முதல் முப்படைத் தளபதி அவர்கள் மற்றும் ராணுவ வீரர்கள் குன்னூர் அருகே ஏற்பட்ட விபத்தில் உயிர் நீத்தது மன வேதனை அளிக்கிறது. நம் தேசத்தின் நலனுக்காக வாழ்ந்த இவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம் என கூறினார்.
அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.மாரிராஜன் அவர்கள், சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.சங்கு அவர்கள், காவல் ஆய்வாளர்கள், மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.