கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் தீயணைப்பு மீட்பு பணித்துறை சார்பில் பணியின் போது தீ விபத்தில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். மும்பை துறைமுகத்தில் கடந்த 1944-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி அன்று வெடிபொருட்கள் ஏற்றி நிறுத்தி வைத்திருந்த கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது தீய அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்புத்துறையை சேர்ந்த 66 பேர் உயிரிழந்தனர். அவர்களின் நினைவாக, ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி அன்று நீத்தார் நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கிருஷ்ணகிரி தீயணைப்பு நிலைய வளாகத்தில் தீயணைபப்பு படை வீரர்களுக்கு நீத்தார் நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு மாவட்ட தீயணைப்பு அலுவலர் அந்தோணி தலைமை தாங்கி நினைவு தூணுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து இறந்தவர்களுக்காக 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தினார்கள்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்