தென்காசி : தென்காசி மாவட்டம், V.K புதூர் அருகே உள்ள முத்துகிருஷ்ணாபேரி பகுதியை சேர்ந்தவர் சங்கர் குமார், (31). இவர் தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு காவல் நிலையத்தில் காவலராக பணி புரிந்து வந்த நிலையில் கடந்த (18.06.2025) அன்று முறப்பநாடு அருகில் உள்ள தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் வாகன விபத்து மீட்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ஆற்றுப் பாலத்தில் இருந்து தவறி கீழே விழுந்து உயிரிழந்தார். இவரது குடும்பத்திற்கு தமிழக அரசால் நிவாரண நிதி வழங்கப்பட்ட நிலையில் காவலர் சங்கர் குமாருடன் 2018 ஆண்டு காவல் பணியில் இணைந்த 38 மாவட்டங்களை சேர்ந்த காவலர்கள் சார்பாக ரூபாய் 15,73,318/ தொகையை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.அரவிந்த முன்னிலையில் இறந்த காவலரை குடும்பத்திற்கு வழங்கப்பட்டது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்