தருமபுரி: தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த சங்கிலிவாடி கிராமத்தை சேர்ந்தவர் திரு.விஜயன் 32. 2013-ஆம் ஆண்டில் இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்து தற்போது சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை காவலராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 6-ம் தேதி ரவுடிகளால் தாக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறந்த காவலரின் உடல் நல்லடக்கம் நேற்று அவரது சொந்த ஊரில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தருமபுரி மாவட்ட காவல்துறையின் சார்பில் கலந்து கொண்டு காவல்துறையினரால் துப்பாக்கி குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.