சென்னை : கடந்த (18/1/2023), ஆம் தேதி அன்று தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் தலைமை காவலர் 2384 திருமதி.ஷீலா ஜெபமணி என்பவர் வாகன விபத்தில் சிக்கி பின்பு சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். மேற்படி அவரது குடும்பத்திற்கு (03/07/2023) ஆம் தேதி சீலா ஜெபமணி வங்கி கணக்கு வைத்திருந்த AXIS BANK -ல் இருந்து அவருக்கு காப்பீடு தொகையான ( Salary Package) ரூபாய் 30,00,000/- அவரது குடும்பத்தினருக்கு அவரது கணவரிடம் அளிக்கப்பட்டது. அவர்களது இரண்டு குழந்தைகளுக்கு படிப்பு செலவிற்காக தலா 4,00,000/- என மொத்த ரூபாய் 38,00,000/- அவரது குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டது. மேற்படி பணத்தை வங்கி அதிகாரிகளிடமிருந்து விரைந்து கிடைக்க காவல்துறை சார்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு தாம்பரம் காவல் ஆணையர் திரு.அமல்ராஜ் அவர்களின் முன்னிலையில் AXIS BANK அதிகாரிகளிடமிருந்து பெற்று வழங்கப்பட்டது. மேற்படி நிகழ்ச்சியில் காவல் இணை ஆணையர் திரு.மூர்த்தி அவர்கள், மற்றும் தாம்பரம் காவல் உதவி ஆணையர் திரு.சீனிவாசன் அவர்கள் இருந்தனர்.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ராஜ் கமல்