திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே உள்ள காணியம்பாக்கம் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான படைப்பாற்றலை வெளிப்படுத்திய ரோபாட்டிக் இயந்திரங்கள் கொண்ட ஸ்டெம் (அறிவியல் கண்காட்சி) நடைபெற்றது. பூமி தொண்டு நிறுவனம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில் மாணவ,மாணவிகள் தங்களது அறிவியல் படைப்புகளை தயார் செய்து அதற்கு விளக்கம் கொடுத்து காண்போரை கவர்ந்தனர். மாணவர்கள் படைத்த சிறந்த அறிவியல் படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. காணியம்பாக்கம் அரசினர் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மலையப்பன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பூமி தொண்டு நிறுவன துணை இயக்குனர் பானு ஹரிஹர புத்திரன், மூத்த மேலாளர் சினேகா எலிசபெத் ஆகியோர் முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளர்களாக சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனை மருத்துவர் டாக்டர் கோவிந்தராஜ், காட்டூர் உதவி ஆய்வாளர் ராஜேஷ்கண்ணன்,மின்சார வாரிய உதவி செயற் பொறியாளர் சுகுமார், பெரும்பேடு அரசு பள்ளி அறிவியல் ஆசிரியர் முனுசாமி, உதவி பள்ளி தலைமை ஆசிரியர் அருண்குமார், பூமி தொண்டு நிறுவன உதவி மேலாளர் அக்ஷய் குமார், சமூக ஆர்வலர் குரு சாலமன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். கணித ஆசிரியர் ஏ. சதானந்தன் நிகழ்ச்சியை தொகுத்தார். பூமி தொண்டு நிறுவன ஆசிரியர் வளர்மதி நன்றி கூறினார்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு