குமரி: மாவட்டம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மாவட்டம் முழுவதும் போலீசாரின் வாகன தணிக்கையின் போது முக கவசம் அணியாமல் வந்ததாக 1581 பேர் மீதும், சமூக இடைவெளி கடைப்பிடிக்காமல் இருந்ததாக 31 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. ஊரடங்கை மீறியதாக 07 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் ஊரடங்கு உத்தரவை மீறிய 07 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.