திண்டுக்கல் : சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த ஜேக்கப்(30). இவர் சென்னை சுவேதா என்ஜினீயரிங் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர் தீபாவளி விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானல் செல்வதாக தனது வீட்டில் கூறி விட்டு திண்டுக்கல் வந்த ஜேக்கப் திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் லாட்ஜில் அறை எடுத்து தங்கினார். இன்று அவரது அறை கதவு நீண்ட நேரம் திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த லாட்ஜ் ஊழியர்கள் இது குறித்து நகர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.இதனையடுத்து அங்கு வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு மின் விசிறியில் தூக்கு போட்ட நிலையில் ஜேக்கப் இறந்து கிடந்தார். இது குறித்து நகர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி