கடலூர்: தமிழ்நாடு காவல்துறையின்உதவி ஆய்வாளர் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேர்வு மையங்களை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு S. ஜெயக்குமார், IPS நேரில் பார்வையிட்டு, மேற்பார்வை மேற்கொண்டு வருகிறார். தேர்வு மையங்களில் தேர்வர்கள் நியாயமான முறையில் தேர்வில் ஈடுபடுவதை உறுதி செய்ய, பாதுகாப்பு ஏற்பாடுகள், அடையாளச் சரிபார்ப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் முறையாக நடைபெறுவதை அவர் கவனித்துள்ளார்.
மேலும், தேர்வர்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளும் சீராக வழங்கப்படுவதை உறுதி செய்யவும், எந்தவித இடையூறும் ஏற்படாதவாறு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். தேர்வு மையங்களில் காவல் துறை உயர்தர அதிகாரிகள் மற்றும் பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்.
















