கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சார்பில் ஆயுதப்படை சமூக நலக்கூடத்தில் வைத்து மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் (ஆண் பெண் மூன்றாம் பாலினத்தவர் ) ஆகியோருக்கு உதவி ஆய்வாளர் தேர்வுக்கான இலவச பயிற்சி தொடக்க நிகழ்வு நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் ஸ்டாலின்(இ.கா.ப)கலந்து கொண்ட அனைவரையும் பாராட்டி முயற்சி உடையார் எப்பொழுதும் தோற்றதில்லை வெற்றி கனியை பறித்து வாகை சூடி உதவி ஆய்வாளர்களாக வலம் வர அனைவரையும் வாழ்த்தி பயிற்சி வகுப்பினை தொடங்கி வைத்தார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி