திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள நக்கனேரியை சேர்ந்தவர் சத்யாதேவி (34). இவர் ராதாபுரம் அருகேயுள்ள காரியாகுளத்தைச் சேர்ந்த மகிழ்வதனா என்ற பெண்ணிடம் தன்னை உதவி ஆட்சியர் என அறிமுகப்படுத்திக் கொண்டு பழகி வந்துள்ளார். பின்னர், தான் அரசு ஒப்பந்த வேலையைப் பெறுவதற்கு 100 பவுன் தங்க நகை தேவைப்படும் நிலையில், தன்னிடம் 90 பவுன் இருப்பதாகவும், மீதி 10 பவுன் நகையைத் தந்தால் ஒப்பந்தம் கிடைத்தபிறகு அதிக அளவில் பணம் தருவதாகவும் ஆசைவார்த்தை கூறியுள்ளார்.
இதனை நம்பிய மகிழ்வதனாவும் அவரது கணவரும் 10 பவுன் நகையைப் சத்யாதேவியிடம் கொடுத்துள்ளனர். சத்யாதேவி தான் வாங்கிய நகையை திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி வரவே மகிழ்வதனா, இது தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன், இ.கா.ப., விடம் புகார் அளித்தார். அதன்படி மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் விஜயகுமார் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர், அன்னலக்ஷ்மி உதவி ஆய்வாளர், ஆஷா ஜெபகர் மற்றும் தலைமை காவலர் முத்துராமலிங்கம் தலைமையில் விசாரணை நடத்தி, சத்யாதேவியை கைது செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்